இரவு டிபனுக்கு வாழைத்தண்டு ஊத்தாப்பம் இப்படியும் செய்யலாமே! எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!!

Summary: வீடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரே தோசை வகையை செய்து சாப்பிட்டு சலித்து போய் இருக்கலாம் ஆகவே சற்று வித்தியாசமான முறையில் இந்த வாழைத்தண்டு ஊத்தப்பம் செய்து பார்க்கலாமே! ஊத்தப்பம் தென்னிந்தியாவில் ஒரு பிரபலமான காலை மற்றும் மாலை நேர டிபன். இது பொதுவாக சாம்பார், சட்னியுடன் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது செய்வதற்கு மிகவும் எளிதானது, அதேநேரம் ஆரோக்கியமானதும் கூட. உங்கள் நாளை ஒரு சத்தான உணவுடன் தொடங்க விரும்பினால் நிறைய காய்கறிகள் மற்றும் குறைந்த எண்ணெயுடன் மொறுமொறுப்பான ஊத்தப்பம் செய்யலாம்

Ingredients:

  • 200 கி வாழைத்தண்டு
  • 2 வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • இட்லி பொடி
  • கருவேப்பிலை,கொத்தமல்லி
  • தோசை மாவு
  • உப்பு
  • நெய் அல்லது எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. வாழைத்தண்டை நார் எடுத்து மிகச்சிறிய அளவில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  2. கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு நறுக்கிய வாழைத்தண்டை நன்றாக பிழிந்து விட்டு, தண்ணீர் சத்து வற்றும் வரை நன்கு வதக்கவும்.
  3. வதக்கிய வாழைத்தண்டை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. தோசை கல்லிலை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் அல்லது நெய் தடவி கணமாக தோசையாக ஊற்றி அதன் மீது கலந்து வைத்த வாழைத்தண்டு கலவையை தூவவும்.
  5. அதன் மீது தேவையான அளவு நெய் மற்றும் இட்லி பொடி தூவி கொள்ளவும். நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக விடவும்.
  6. இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் தட்டில் மாற்றி கொள்ளவும்.
  7. அவ்வளவு தான்ஆரோக்கியமான, சுவையான வாழைத்தண்டு ஊத்தாப்பம் தயார்.