பாட்டி காலத்து பாரம்பரிய பாசிப்பருப்பு புட்டு மிக மிக சுலபமாக இப்படி செய்து பாருங்களேன்!!!

Summary: உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் பயத்தம்பருப்புவைத்து ஒரு சுவையான புட்டு  நினைத்த உடனே சட்டெனசெய்து விடமுடியும். அதிலும் இந்த புட்டு  குழந்தைகளுக்குப்பிடித்த இனிப்பு சுவையில் இருக்கிறது. ஆகையால் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்குவரும் நேரத்தில் ஒரு கப் பயத்தம்பருப்பு எடுத்து இப்படி சுவையான புட்டு செய்து கொடுங்கள்.குழந்தைகளும் வந்த களைப்பு தீர இந்த சுவையான புட்டை ருசித்து மகிழ்ச்சி அடைவார்கள்.வாருங்கள் இந்த பயத்தம்பருப்பு புட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்வோம்

Ingredients:

  • 1 கப் பயத்தம் பருப்பு
  • 1/4 கப் நெய்
  • 10 முந்திரிப்பருப்பு
  • 2 கை தேங்காய்த் துருவல்
  • 3/4 கப் வெல்லப்பொடி
  • 1/2 தேக்கரண்டி ஏலப்பொடி

Equipemnts:

  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. பயத்தம் பருப்பைஅரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் தண்ணீரை வடித்து, கொரகொரப்பாக 1 சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும்.
  2. 1 நெய் தடவிய தட்டில் அதை பரவலாக பரத்தி 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும். ஆறிய பிறகு நன்கு உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை கெட்டிப்பாகு காய்ச்சவும்.
  3. அது நன்கு உதிருதிராக வரும்வரை குறைந்த தீயில் அதை வறுக்கவும்.
  4. பிறகு தேங்காய்த் துருவலைச்சேர்த்து மறுபடியும் சிறிதளவு நேரம் கிளறவும். ஏலப்பொடியையும் பாகையும் நன்கு கிளறி இறக்கவும்.