கோயம்புத்தூர் தட்டாம்பயிறு கடையல் குழம்பு செய்வது எப்படி ?

Summary: நீங்கள் வழக்கமாக செய்யும் தட்டாம்பயிறு குழம்பு அல்லாமல் கோயம்புத்தூர் பகுதியில் பிரபலமாக மற்றும் அதிகமாக செய்யும் தட்டாம்பயிறு கடையல் குழம்பு. இந்த குழம்பை நீங்கள் மதிய உணவுக்கு ஒரு முறை செய்து பாருங்கள் ஒரு தட்டு சோறும் காலியாகும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும். பயிறு குழம்பு பிடிக்காது என்று கூறுபவர்கள் கூட இந்த தட்டாம்பயறு கடையல் குழம்பை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் நாம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நீங்கள் மறுநாள் என்ன குழம்பு வைக்கலாம் என்று சிந்திப்பதற்கு பதில் வாரத்தில் ஒரு நாள் இந்த குழம்பை செய்து கொடுங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் சலிக்காமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 150 கிராம் தட்டாம் பயறு
  • 500 Ml தண்ணீர்
  • 10 பல் பூண்டு
  • 1 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 tbsp மல்லி
  • 1 tbsp சீரகம்
  • 6 வர மிளகாய்
  • 2 tbsp தேங்காய் எண்ணெய்
  • 20 சின்ன வெங்காயம்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • அரைத்த பொடி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நாம் வைத்திருக்கும் 150 கிராம் தட்டாம்பயிரை சேர்த்து பிறகு ஐந்து நிமிடங்கள் மணம் வரும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் வறுத்த தட்டாம்பயிறை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு முறை நன்கு அலசிக் கொள்ளுங்கள்
  2. பின் குக்கரை அடுப்பில் வைத்து தட்டாம்பயிறை சேர்த்து அதில் 500 ML தண்ணீர் ஊற்றி அதனுடன் 10 பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய், நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டீஸ்பூன் மல்லி ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் ஐந்து வர மிளகாய் சேர்த்து திருதிருவேன அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தோல் உரித்து வைத்திருக்கும் 20 சின்ன வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  4. பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு நன்கு வதங்கி வந்தவுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி விட்டு பின் குக்கரில் வேகவைத்த பயிருடன் இதை சேர்த்து குக்கரை அடுப்பில் வைத்து குழம்பை நன்றாக கொதிக்க விடுங்கள்.
  5. பின் குழம்பு நன்றாக கொதித்து வரும் பொழுது அதனுடன் ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடுங்கள். பின்பு குக்கரில் உள்ள குழம்பை பருப்பு மத்து வைத்து நன்றாக கடைந்து விடுங்கள். அவ்வளவுதான் சுவையான கோயம்புத்தூர் தட்டாம்பயிர் கடையல் குழம்பு தயார்.