பன்னீர் சீஸ் சமோசா மொறு மொறுன்னு சுலபமாக வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்கள்!

Summary: சீஸ் பனீர் சமோசா ரெசிபி, பெயருக்கு ஏற்றாற்போல், கேப்சிகம், வெங்காயம் மற்றும் பிற மசாலாப் பொருட்களுடன் சீஸ் மற்றும் பனீரைச் சேர்த்து செய்யப்படுகிறது. இது வித்தியாசமான செய்முறை ஆனால் வாயில் நீர் ஊறவைக்கும் சுவையைத் தருகிறது. இந்த சீஸி மற்றும் சுவையான சமோசா ரெசிபி மிக விரைவாக செய்யக்கூடியது. இது கொத்தமல்லி அல்லது புதினா சட்னி அல்லது டொமேட்டோ சாஸ் உடன் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Ingredients:

  • 1 கப் மைதா மாவு
  • 1 தேக்கரண்டி ஆம்சூர் பவுடர்
  • 1 தேக்கரண்டி சாட் மசாலா பவுடர்
  • 1 சிட்டிகை ஒமம்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 2 சிட்டிகை சோடா உப்பு
  • 100 கிராம் பன்னீர்
  • 50 கிராம் துருவிய சீஸ்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் ஓமம், சோடா உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.
  2. சிறிது எண்ணெய் தடவி 20 நிமிடம் பிசைந்த மாவை ஊற வைக்கவும்.
  3. பன்னீரை துருவி அதனுடன் மிளகாய் தூள், சாட் மசாலா, ஆம்சூர் பவுடர், உப்பு, மிளகாய் தூள், குடை மிளகாய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு துருவிய சீஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. பின் சிறிது மைதா மாவில் தண்ணீர் ஊற்றி பசை போல் தயார் செய்து கொள்ளவும்.
  5. பிசைந்து வைத்த மாவில் சிறிது எடுத்து மெல்லிய சப்பாத்தி மாதிரி தேய்த்து கொள்ளவும்.