கேரளத்து கடலை கறி இப்படித்தான் செய்யணும் ஆப்பத்தோடு, கடலை கறி அசல் கேரள உணவு சாப்பிட்ட திருப்தி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!

Summary: உங்களுக்கு கேரளா ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? வீட்டில் கேரளா ரெசிபிக்களை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கடலை கறியை வீட்டில் செய்து சாப்பிடுங்கள். நமது அண்டை மாநிலமான கேரளாவில் பிரபலமான காலை உணவாக பகடலை கறி உள்ளது. காலை வேளையில் நமது வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி செய்து கொடுக்க நினைத்தால், நீங்கள் கடலை கறியை தேர்வு செய்து கொள்ளலாம்.

Ingredients:

  • 1 கப் கொண்டைக்கடலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 6 சிறிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 3 கிராம்பு
  • 1 பட்டை
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு
  • கொஞ்சம் கருவேபபிலை கொத்த மல்லி இலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து  எண்ணெய்விட்டு காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம், பட்டை, சோம்பு, சீரகம், மிளகு கிராம்பு மற்றும் மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லித்தூள், தேங்காய் அனைத்தையும் சேர்த்து வறுக்கவும்.
  2. வறுத்ததை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பின் முதல் நாள் இரவே ஊறவிட்ட கருப்பு கொண்டை கடலையை ஏழு விசில் வரை விட்டு வேக வைக்கவும்.
  4. பின்னர் ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்தது காய்ந்தவுடன் கடுகு, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து பொரிய விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு இவற்றில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. அதன் பின்பு வேக வைத்த கடலையும் தண்ணீருடன் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவும்.
  7. ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க விட்டு பிறகு கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான கேரளா கடலை கறி தயார்.
  8. புட்டு ஆப்பம் இடியாப்பம் போன்றவற்றுக்கு பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.