பீட்ரூட் ராகி தோசை சுலபமாக இப்படி செஞ்சு கொடுத்தா குழந்தைகள் 2 அதிகமாவே சாப்பிடுவாங்க!

Summary: சிறுதானியங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய இந்த கேழ்வரகு ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது. அடிக்கடி சிறுதானியங்களைகொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு வலுபெறும்.கேழ்வரகு சாப்பிடவேண்டும் என்றாலே பலருக்கும் பிடிக்காமல் போகலாம் . சுவையான ருசியில் பீட்ரூட் சேர்த்துபீட்ரூட் ராகி தோசை  இப்படி மட்டும் செஞ்சுபாருங்க, இந்த காலத்து குழந்தைகளுக்கும் ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி கேட்டு அடம்பிடிப்பாங்க.

Ingredients:

  • 1 கப் கேழ்வரகு மாவு
  • உப்பு
  • 1 கப் ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு
  • 1 கப் துருவிய பீட்ரூட்
  • 3 பச்சை மிளகாய்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. ஆட்டியஉளுத்தம்பருப்பு மாவு, உப்பு, ராகி மாவு சேர்த்து கலந்து, 10 மணி நேரம் கழித்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.
  2. பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் பச்சை மிளகாய், பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வதக்கிய பீட்ரூட்டை மாவில் சேர்த்து கலக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு, வெந்ததும் திருப்பி விட்டு மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
  4. சத்து மிகுந்த தோசை இது.