வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் இனி வீட்டிலயே இப்படி செய்து அசத்துங்கள்! இதன் ருசியே தனி ருசி!

Summary: மீன் குழம்பு விட, மீன்  வறுவல் என்றால் பலரும் விரும்பிசாப்பிடுவார்கள். அசத்தலான சுவையில் கறிவேப்பிலை சேர்த்து வஞ்சிர மீன் கறிவேப்பிலைவறுவல் இப்படி செய்து பாருங்களேன். இப்படி ஒரு மணம், சுவை நிறைந்த மீன் வறுவலை இதுவரைக்கும்நீங்க சுவைத்திருக்க வாய்ப்பே இருக்காது. வஞ்சிரம் மீனில் நிறைய புரோட்டீன், ஒமேகா3, வைட்டமின் சத்துக்கள் உள்ளன ,குறிப்பாக, பார்வை குறைபாட்டை மேம்படுத்துகிறது.

Ingredients:

  • 4 துண்டு வஞ்சிர மீன்
  • 1 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு
  • கறிவேப்பிலை
  • 25 கிராம் மிளகாய்த் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 10 கிராம் தனியாத் தூள்
  • 5 கிராம் மிளகுத் தூள்
  • 5 கிராம் சீரகத் தூள்
  • 10 கிராம் அரிசி மாவு
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மசாலாவைச் சேர்த்து மீனை நன்றாக ஊற வைக்கவும்.
  2. தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.
  3. கடாயில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
  4. எண்ணையில் பொரித்தெடுத்த கறிவேப்பிலையை, மீன் துண்டுகளின் மீது தூவி விடவும். எலுமிச்சை துண்டுகளுடன் சேர்த்து பரிமாறலாம்.