வரகரசியை வைத்து பஞ்சு போன்ற ஆப்பம் இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: பச்சரிசி, உளுந்து எல்லாம் சேர்த்து செய்யப்படும்ஆப்பம் பொதுவாக எல்லோரும் செய்வது தான். வரகு அரிசியில் ஆப்பம் அருமையாக இருக்கும்.ஆப்பம் என்றால் நடுவில் பஞ்சு போன்று தடிமனாகவும், முனையை சுற்றிலும் மெலிதாக மொறுமொறுவென்றுஇருக்க வேண்டும். நம் வீட்டில் இதே மாதிரி வரகரிசி ஆப்பம் அருமையாக செய்து விடலாம். வாங்க இதை எப்படி செய்யலாம் என்றுபார்ப்போம்.

Ingredients:

  • 1/2 கப் வரகரிசி
  • 1/2 கப் புழுங்கலரிசி & பச்சரிசி இரண்டும் சேர்த்து
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் உளுந்து
  • 1/4 கப் தேங்காய் தண்ணி
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • சோடா உப்பு
  • 1 சிட்டிகை சர்க்கரை
  • 1 சிட்டிகை ஏலக்காய்த்தூள்

Equipemnts:

  • 1 ஆப்ப கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் களைந்து கொள்ளவும்,
  2. இக்கலவையுடன் தண்ணீர் விட்டு நன்கு களைந்த வரகரிசியை ஒன்றாகச் சேர்த்து மூழ்குமளவுக்கு நீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  3. பிறகு தண்ணீரை வடித்துவிடவும். இதனுடன் தேங்காய் சேர்த்து கெட்டியாக மைபோல் அரைக்கவும்.
  4. அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் வைத்து மறுநாள் காலை தேங்காய் தண்ணி , சர்க்கரை சோடா உப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து தோசை மாவை விட சற்றுத் தளர்வாகக் கரைத்துக்கொண்டு, ஆப்பச் சட்டியில் ஆப்பமாக வார்த்து எடுக்கவும்.