குடைமிளகாய் வெஜ் ஆம்லெட் இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் மொத்தமாக காலியாகவிடும்!

Summary: கேப்ஸிகம் வெஜ் ஆம்லெட் ஒரு பேச்சுலர் ஆம்லெட் ரெசிபியை தான், அவ்வளவு சுலபமாக  யார் வேண்டுமென்றாலும் இந்த ஆம்லேட்டை செய்யலாம்.அதேசமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில பொருட்களையும் இதோடு சேர்த்து செய்யப்போகின்றோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய கேப்ஸிகம் வெஜ்ஆம்லெட் மிக மிக எளிமையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Ingredients:

  • 1 குடைமிளகாய்
  • 1/2 கப் கடலைமாவு
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி கார்ன் ஃப்ளார்
  • 1 பெரிய வெங்காயம்
  • கேரட்
  • கொத்தமல்லி தழை
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசைக்கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. குடைமிளகாய்,விதையை நீக்கி விட்டு வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
  2. மீத மாகும் மேல் பகுதி மற்றும் கீழ்ப் பகுதியை பொடியாக வெட்டவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும்.
  3. மாவில் எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி உப்பு சேர்த்து கரைக்கவும். (பஜ்ஜி மாவு பதமாக) கரைத்து கொள்ளவும்.
  4. தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு குடைமிளகாயை வைத்து நடுவில் கரைத்த மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக விடவும்.
  5. தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு 5 குடைமிளகாயை வைத்து நடுவில் கரைத்த மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக விடவும். சுவையான கேப்ஸிகம் வெஜ் ஆம்லெட் தயார்.