மொறுமொறுன்னு குண்டு குண்டா முட்டைகோஸ் போண்டா நம்ம வீட்டிலயே இப்படி செய்து பாருங்க!

Summary: மாலை நேர சிற்றுண்டிகளில் முட்டைக்கோஸ் போண்டாவிற்கு என ஒரு தனிஇடம் உண்டு என்றால் அது மிகை அல்ல. இந்தியா முழுவதும் பலவிதமான போண்டா வகைகள் கிடைக்கின்றன. உதாரணமாக மைசூர் போண்டா, உளுந்து போண்டா, உருளைக்கிழங்கு போண்டா, காய்கறி போண்டா, கீரை போண்டா, மற்றும் முட்டை போண்டா என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

Ingredients:

  • 1/2 கப் முட்டைகோஸ்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை,கொத்தமல்லி
  • 200 கி கடலை மாவு
  • 200 கி அரிசி மாவு
  • ஸ்பூன் உப்பு
  • மிளகாய்த் தூள்
  • சோடா உப்பு
  • சீரகம்
  • பெருங்காய தூள்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பொடியாக முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக அரிந்து கொள்ளவும்.
  2. கடலைமாவு, மற்றும் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் மிளகாய்த்தூள், உப்பு தேவையான அளவு மற்றும் சீரகம், சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. கலந்த மாவில் முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கையில் எடுத்து உருட்டி போடும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  5. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு கரண்டி சூடான எண்ணெய்  எடுத்துபோண்டா மாவில் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.