மதிய உணவுக்கு ருசியான சோயா கிரேவி இப்படி ட்ரை பணாணி பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!

Summary: சோயா(மீல் மேக்கர்) சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தேவையான புரதச்சத்து சோயாவில் நிறைய இருக்கு. எல்லோருக்கும் மீல் மேக்கர் பிடிக்கும் என்று கூறி விட முடியாது ஆனால் சோயா பீனிலிருந்து உருவாகக்கூடிய இந்த மீல்மேக்கர் வெஜ் பிரியாணி போன்றவற்றில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு. அது போல இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக செய்து ரசித்து சாப்பிடலாம் இதை மிக எளிதாய் சமைக்கலாம். சாதம், சப்பாத்தி, பூரி, நாண் இவற்றுடன் தொட்டுக்கொள்ள மிகச் சரியான சைட்டிஷ் இது

Ingredients:

  • 1 கப் சின்ன சோயா
  • 2 தக்காளி
  • 2 வெங்காயம்
  • 3 Tbsp தேங்காய் துருவியது
  • 1 துண்டு இஞ்சி
  • 6 பல் பூண்டு
  • 1/4 Tsp சோம்பு
  • 4 Tbsp மிளகாய் தூள்
  • 6 முந்திரி
  • 2 Tbsp எண்ணெய்
  • பட்டை
  • சோம்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும். அரைக்க தந்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் நன்கு சேர்த்து கொதிக்க விடவும். பின் சோயாவை (மீல் மேக்கர்) சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
  3. பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் என்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, பட்டை போட்டு வதக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
  4. அதன் பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளியை நன்கு வெங்காயத்துடன் சேர்த்து மசிந்து வந்ததும் சோயவையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. 5 நிமிடத்திற்கு பின், அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கிளறி விட்டு வதக்கவும். பின் பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  6. கிரேவி நன்கு கொதித்து வந்ததும் பின், கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைத்து பரிமாறவும். இந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.