இரவு டிபனாக மஞ்சள் பூசணி பூரி இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! 2 பூரி அதிகமாகவே சாப்பிடுவாங்க!

Summary: டிபன் வகைகளில் இட்லி, பொங்கல், பூரி, சப்பாத்தி,உப்புமா, கிச்சடி என பலவித உணவுகள் இருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்மிகவும் விரும்பி சாப்பிடுவது பூரியை தான். எனவே பலருக்கு வீட்டில் உள்ளவர்கள் பூரிதான்பிடித்த உணவாக இருக்கும். அவ்வாறு எப்போதும் ஒரே மாதிரியான பூரியை செய்து சாப்பிடாமல்இப்படி வித விதமான தோசைகள் செய்து கொடுத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் இன்னும் மகிழ்ச்சியாகசாப்பிடுவார்கள். அப்படி பூசணிக்காயின் உள்ளிருக்கும் பஞ்சு போன்ற சதைப்பற்றுள்ள பகுதியைபயன்படுத்தி இந்த பூசணிக்காய் பூரிசெய்யப்படுகிறது. இதில் இனிப்பு சுவை அற்புதமாக இருக்கும்.

Ingredients:

  • 1 கப் மஞ்சள் பூசணி
  • 1/2 கப் கோதுமை மாவு
  • 1/2 கப் வெல்லம்
  • 2 ஏலக்காய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. மஞ்சள் பூசணி மற்றும் வெல்லத்தை துருவி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  2. வெல்லம் கரைந்ததும் வேறு பாத்திரத்திற்கு ஊற்றி ஒரு கொதி வந்ததும் அதில் துருவிய பூசணியைப் போட்டு வேக வைக்கவும்.
  3. பூசணி நன்றாக வெந்ததும் கோதுமை மாவையும், உப்பையும் அதனுடன் சேர்க்கவும். இவற்றை ஒன்றாக கலந்து பூரிக்கு பிசைவது போல் பிசைந்து கால் மணி நேரம் மூடி வைக்கவும்.
  4. பிசைந்து வைத்திருக்கும் மாவை பூரிகளாக தேய்த்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரிகளை பொரித்து எடுக்கவும்.
  5. ருசியான குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பூசணிக்காய் பூரி ரெடி