மணமணக்கும் உடுப்பி ஹோட்டல் சாம்பார் இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அபபாரமாக இருக்கும்!

Summary: பெரும்பாலும் நிறைய பேர் பலமுறை வீட்டில் சாம்பார்சாப்பிட விரும்ப மாட்டார்கள். காரணம் வீட்டில் சாம்பார் வைத்தால் ஹோட்டல் போல் திக்காக சுவையாக வராது என்பது தான். ஆனால் இந்தசெய்முறையில் உடுப்பி சாம்பார் திக்காக சுவையாக சாம்பார் வைக்க முடியும். இந்த துவரம்பருப்பைஒருமுறை கழுவினால் போதாது. நான்கிலிருந்து ஐந்து முறை இதில் இருக்கும் தூசுகள் அனைத்தும்நீங்கும் படி கழுவிக் கொள்ள வேண்டும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 1/4 கிராம் முருங்கைக்காய், கத்தரிக்காய், சௌசௌ
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 தேக்கரண்டி புளிச்சாறு
  • கறிவேப்பிலை
  • நறுக்கிய கொத்தமல்லி
  • 1/2 கடுகு கடுகு
  • 2 வரமிளகாய்
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
  • 1/2 தேக்கரண்டி வெல்லம்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • உப்பு
  • 2 தேக்கரண்டி உளுந்து
  • 2 தேக்கரண்டி சீரகம்
  • 3 தேக்கரண்டி மல்லி
  • 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  • 4 வரமிளகாய்
  • 1 கப் துருவிய தேங்காய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி பெருங்காயம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாற வதக்கவும்.
  2. காய்களை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும் புளிகரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை மூடியிட்டு வைக்கவும்.
  3. பின்னர் அரைத் தேங்காய் விழுது, வெல்லம், உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.
  4. விழுது வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து 1 கொதிவிட்டு கடுகு கறிவேப்பிலை, தாளிக்கவும்.
  5. வரமிளகாய் கொத்தமல்லி தூவி இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறவும்.