சுவையான சிக்கன் ஒட்டை வடை செய்வது எப்படி ?

Summary: நாம் மாலை நேரம் சிறிது பசி எடுப்பதன் காரணமாக வெளியில் சென்று சில ஸ்னாக்ஸ் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தற்சமயம் பலரும் வழக்கமாக வைத்துள்ளார்கள். அப்படிப்பட்டவர்கள் இனி மாலை நேரம் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் பொழுது இந்த சிக்கன் உளுந்து வடையை செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். இது உங்களுக்கு ஒரு புது உணவை சாப்பிடும் ஒரு அனுபவம் கிடைக்கும். இந்த உணவை எளிமையான முறையில் உடனடியாகவும் செய்துவிடலாம். குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் அவர்கள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறையும் இதை போல் செய்து தர சொல்வார்கள்.

Ingredients:

  • 250 KG சிக்கன்
  • 2 பச்சை மிளகாய்
  • 3 துண்டு இஞ்சி
  • 10 பல் பூண்டு
  • 1 tbsp எலுமிச்சை சாறு
  • 1 tbsp உப்பு
  • 2 tbsp மிளகு தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 4 பிரெட்
  • 2 முட்டை
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நான்கு பிரட் துண்டுகளை நறுக்கி சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு நாம் வாங்கி வைத்திருக்கும் எலும்பில்லா சிக்கனை இரண்டு முறை தண்ணீரில் நன்கு அலசி கொண்டு மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.
  2. பின் அதே மிக்ஸி ஜாரில் இரண்டு பச்சை மிளகாய், மூன்று துண்டு இஞ்சி, பத்து பல் பூண்டு சேர்த்து சிக்கனை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் அரைத்த சிக்கனை ஒரு பவுளில் சேர்த்து கொள்ளவும்.
  3. பின் அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் துளாக்கிய பிரட்டில் பாதி அளவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  4. அதன் பின் மற்றொரு பவுளில் இரண்டு முட்டை உடைத்து ஊற்றி அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் முட்டைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
  5. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தீயை மிதமாக எறிய விட வேண்டும். பின்பு எண்ணெய் நன்கு காய்ந்ததும்.
  6. நாம் வைத்திருக்கும் சிக்கனை வடை போல் தட்டி நடுவில் ஒரு துளையிட்டு முட்டையில் நன்றாக முக்கி எடுத்து மீதம் இருக்கும் ரெட் தூள்களில் பிரட்டை எடுத்து எண்ணெயில் சேர்க்கவும் இப்படியாக மீதம் இருக்கும் சிக்கனையும் வடை போல் செய்து பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான சிக்கன் உளுந்த வடை தயார்.