செட்டிநாடு சிறப்பு உணவான “கும்மாயம்” எளிதாக இப்படி வீட்டிலே செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை!

Summary: பெரும்பாலும் பண்டிகை நாளில் செய்யப்படும்கும்மாயல் அருமையான ருசியில் இருக்கும். கும்மாயம் என்பது ஒரு பாரம்பரிய செட்டிநாடுஇனிப்பு உணவாகவும். கும்மாயம் என்பதற்கு குழையச் சமைத்த பருப்பு என்று பொருள்படும்.இது உளுந்து, பாசிப் பருப்பு மாவு, நெய் , பனங்கருப்பட்டி போன்றவற்றைச் சேர்த்து வேகவைத்து செய்யப்படும் இனிப்புப் பலகாரமாகும் . . இது மிகவும் ஆரோக்கியமான நம்முடைய வீட்டிலும்இப்படி ஒரு இனிப்பு கும்மாயம் சுலபமான முறையில் செய்யலாம். வாங்க அந்த அருமையான செட்டிநாடு ரெசிபியை நாமும்தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 டம்ளர் உளுந்து
  • 1/2 டம்ளர் பச்சரிசி
  • 1/4 டம்ளர் பயத்தம் பருப்பு
  • 150 நெய்
  • 150 கிராம் கருப்பட்டி அல்லது வெல்லம்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தேவையான பொருட்களை அளந்து தயாராக எடுத்துக் கொள்ளவும்.பயத்தம் பருப்பு, உளுந்து, பச்சரிசி மூன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. வறுத்தவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து சலித்து வைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி சலித்த மாவை போட்டு வறுக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். வடிகட்டிய தண்ணீரை மீண்டும் அதே பாத்திரத்தில் ஊற்றி பாகு காய்ச்சவும்.
  4. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் மாவை தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். கரைத்து வைத்திருக்கும் மாவை கொதிக்கும் வெல்ல பாகில் சேர்த்து கிண்டவும்.
  5. கிண்டும் போது இடையில் நெய் சேர்த்து கிண்டவும். விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். மாவு நன்கு சுருண்டு வந்ததும் இறக்கவும்.
  6. சுவையான கும்மாயம் ரெடி. இது ஒரு செட்டிநாடு வகை ஸ்பெஷல் இனிப்பு