பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் செட்டிநாடு சுவரொட்டி மசாலா இப்படி செய்து ஒரு தரம் சாப்பிட்டு பாருங்கள்!

Summary: செட்டிநாடு சுவரொட்டி மசால் எளிதான மற்றும் சுவையான ரெசிபி. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும்நல்லது. மட்டன் மண்ணீரலில் அதிக சத்து நிறைந்தது. இதில் வைட்டமின் ஏ, இரும்பு மற்றும்கால்சியம் நிறைந்துள்ளது. நன்மையுள்ள ஆட்டு மண்ணீரல் அதாவது சுவரொட்டி வைத்து செட்டிநாடு சுவையில் மசால் செய்முறையை தான்பார்க்கப்போகிறோம். மட்டன் சுவரொட்டி மசால் என்பது முழு மசாலாக்களுடன் மட்டன் மண்ணீரலில்இருந்து தயாரிக்கப்படும் ஒரு காரமான உணவாகும். செட்டிநாடு சுவரொட்டி மசால் இது மிகவும் சுவையாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வதுஎன்று பார்ப்போம்.

Ingredients:

  • 1/4 கிலோ சுவரொட்டி கறி
  • 5 பச்சை மிளகாய்
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 1 துண்டு தேங்காய்
  • 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
  • 1 தேக்கரண்டி மிளகுத்தூள்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அனைத்து பொருளையும் தயாராக எடுத்து கொள்ளவும்
  2. கறியை எண்ணையுடன் சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  3. பின்னர் அதனுடன் அரைத கலவையை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  4. நன்கு கொதித்து கறி வெந்தவுடன் இறக்கி பரிமாறலாம். சூடான செட்டிநாடு சுவரொட்டி மசால் தயார்.