இட்லி, சப்பாத்தி,தோசைக்கு தொட்டுக்க காலிஃப்ளவர் கிரேவி இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: தினமும்வித்தியாசமாகவும், ருசியாகவும் செய்து கொடுத்தால் நமக்கு எந்த உணவையும் பிடிக்காது என்று சொல்ல மாட்டோம். இந்த காலிஃபிளவர் குருமா செய்வது எளிதானது மற்றும் பரோட்டாவிற்கும் நன்றாக இருக்கும். இந்த கிரேவியில் சேர்க்கப்படும் காலிஃபிளவர் நமது அன்றாட உணவில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை சேர்க்கிறது, எனவே இது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். நீங்கள் விரும்பும் எந்த காய்கறிகளையும் இதில் சேர்க்கலாம். காய்கறிகள் உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு ருசியாக செய்து கொடுத்தால் தானாக உண்பார்கள். மேலும் இதை வெகு சுலபமாக செய்து விடலாம். அந்த வகையில் இன்று காலிபிளவர் கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 சிறிய காலிஃபிளவர்
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் சீரக தூள்
  • 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • 1/2 கப் தேங்காய் பால்
  • உப்பு
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. காலிஃபிளவரை வெட்டி, சூடான தண்ணீரில் உப்புடன் சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் விட்டு தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். மசாலா நன்கு வதங்கியதும், தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  5. கொஞ்சம் தண்ணீர் விட்டு கலந்து, காலிஃபிளவரை சேர்க்கவும். அத்துடன் தேங்காய் பால் சேர்த்து மூடி வைக்கவும்.
  6. ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். பின்னர் தயாரான கிரேவியை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
  7. அவ்வளவுதான் மிகவும் சுவையான காலிஃபிளவர் கிரேவி தயார்.