மரவள்ளி கிழங்கு பொடிமாஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ருசியான ஸ்நாக்ஸ் சுட சுட ரெடி!

Summary: உடலிற்க்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய சில உணவுகளை வீட்டில் வாங்கி வைத்து, எவ்வளவு வற்புறுத்தினாலும் சில குழந்தைகள் அவற்றை சாப்பிடுவதில்லை. அவ்வாறு கிழங்கு வகைகள், காய்கறிகள் இவற்றை பெரும்பாலும் அனைவரும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால் இதுபோன்று மற்றவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கும் உணவுகளையும் அவர்களுக்கு பிடித்த வகையில் சுவையாக சமைத்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு மரவள்ளி கிழங்கு வைத்து செய்யக்கூடிய ஒரு பொடிமாஸை இப்படி செய்து பாருங்கள்.

Ingredients:

  • 3 கப் மரவள்ளிக்கிழங்கு
  • 5 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 கப் பெரிய
  • 3 பச்சை மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 உரல்
  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் உரலில் மிளகாய், பூண்டு, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
  2. அதனுடன் வேக வைத்த மர வள்ளி கிழங்கு சேர்த்து இடிக்கவும். உடனே மசிந்து விடும். இதனையும் ஒரு பவுளில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் கிழங்கு பூண்டு சீரகத்துடன் கலந்து பரிமாறலாம்.
  5. இந்த இடித்த கிழங்கு, காஃபி-க்கு மிகவும் சுவையாக இருக்கும். எல்லா குழம்பு வகைகளுடன் கூட்டுக்கு சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
  6. அவ்வளவுதான். சுவையான இடித்த மர வள்ளிகிழங்கு பொடிமாஸ் ரெடி.