ருசியான மூங்கில் அரிசி  புளிரோதரை இனி யாரும் புளியோதரை வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

Summary: ஊருக்கு செல்லும் பொழுது நம்முடைய முன்னோர்கள்கட்டி சோறு கட்டிக்கொண்டு சென்றனர். அந்த கட்டி சோறு என்பதுதான் புளிசாதம். அது ஒருவாரம் வரை கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும்.புளியோதரை என்றாலே அனைவர்க்கும் பிடித்தமானஒன்று. மூங்கில் அரிசி  சட்டுன்னு அருமையானபுளியோதரை செய்து அசத்த முடியும். அப்படி நாம் செய்யக்கூடிய புளி சாதத்தைமூங்கில் அரிசி  உபயோகப்படுத்தி எப்படி செய்வதுஎன்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். மூங்கில்அரிசி புளியோதரைசுவையே மிகவும் அருமையாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்றுபார்ப்போம்.

Ingredients:

  • 200 கிராம் மூங்கில் அரிசி
  • புளி
  • உப்பு
  • மஞ்சள்தூள்
  • 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. மூங்கில் அரிசியை 6 மணி நேரம் ஊறவைத்து, உதிரியாக சாதம் வடிக்கவும்.
  2. வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்துத் தாளிக்கவும்.
  3. புளியை அரை டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்துச் சேர்க்கவும்.
  4. கொதி வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியான பின் ஆறவைக்கவும்.
  5. இதை மூங்கில் அரிசி சாதத்துடன் சேர்த்துக் கிளறிவிட, மூங்கில் அரிசி ஈஸி புளியோதரை ரெடி