வாரம் ஒரு முறை அவசியம் கண்டதிப்பிலி ரசம் இப்படி செஞ்சி பாருங்க! சளி காயச்சல் எல்லாம் தூர ஒடிப்போகும்!

Summary: கண்டதிப்பிலிக்கு செரிமான சக்தியம் உண்டு.மூலிகைகளில் ஒன்றுவிதவிதமான ரச வகைகளில் கண்டதிப்பிலி ரசம் ரொம்பவே ஆரோக்கியம் மிக்கதாக இருந்து வருகிறது. இதை சூப்பு போல கூட சூடாக குடிக்கலாம். அருமையாகஇருக்கும். சளி, இருமல் தொந்தரவை விரட்டியடிக்க கூடிய சக்தி இந்த ஒரு கண்டதிப்பிலிரசத்திற்கு உண்டு. நெய் சேர்த்து தாளித்து இந்த அளவுகளில் நீங்கள் ஒரு முறை ரசம் வச்சுபாருங்க இருமலும், சளியும் எங்க போச்சுன்னு உங்களுக்கே தெரியாது. சுவையான கண்டதிப்பிலிரசம் செய்முறையை பார்ப்போம் வாருங்கள்.

Ingredients:

  • புளி
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/4 கப் பொடியாக நறுக்கிய கண்டதிப்பிலி இலை
  • 1/4 டீஸ்பூன் நெய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. புளியை 2 கப் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி, அதில் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  2. பின்னர் பெருங்காயத்தூளையும் சேர்க்கவும்.
  3. பின்னர் பொடித்துவைத்துள்ள ரசப்பொடியை போட்டு, கண்டதிப்பிலி இலைகளை கடுகுடன் வதக்கி ரசத்தில் சேர்க்கவும்.
  4. உடனே, இறக்கிவைக்கவும்.சளி பிடித்தவர்களுக்கு ஏற்ற ரசம் இது