Summary: உளுந்தில் இருக்கும் புரோட்டின் நம் அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சத்தாகும். தினமும் என்னடா சட்னி செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் எந்த காய்கறியை சேர்க்காமல் சட்டென உளுந்து, வெங்காயம், தக்காளி கொண்டு செய்யப்படும் இந்த சட்னி நிச்சயம் அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும். உளுந்தின் மகத்துவம் உணர்ந்த நாம் அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ப்ரோடீன் மிகுந்த இந்த உளுந்து சட்னி எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.