சுவையான வாழைப்பழ தோசை செய்வது எப்படி ?

Summary: பொதுவாக நம் வீட்டில் காலை அல்லது இரவு தான் தோசை சுட்டு சாப்பிடுவோம். நீங்கள் தோசை பிரியராக இருக்கிறீர்கள் என்றால் அப்பொழுது இந்த தோசை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமான தோசையாக இருக்கும். இதை தோசை என்று சொல்வதற்கு பதிலாக ஸ்நாக்ஸ் என்றே சொல்லலாம். ஆம், வாழைப்பழத்தை வைத்து வாழைப்பழ தோசையை செய்து பார்க்கலாம் உங்கள் வீடுகளில் ஏதேனும் நிகழ்ச்சிகள் எதுவும் நடந்தால் கண்டிப்பாக ஒரு வாழைப்பழத்தார் வீட்டில் இருக்கும் நிகழ்ச்சி முடிந்து வாழைப்பழத்தார் வேஸ்ட் ஆக செல்வற்குப் பகுதிலாக அப்போது இதை செய்து பாருங்கள்.

Ingredients:

  • 10 piece வாழைப்பழம்
  • 1 கப் தேங்காய் துருவியது
  • ½ கப் வெல்லம்
  • நெய்
  • ½ tbsp ஏலக்காய் துள்
  • ½ tbsp பேகிங் பொடி
  • 4 tbsp முந்திரி குருணை
  • 1 கப் கோதுமை மாவு
  • ½ கப் பால்
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 குழம்பு பாத்திரம்மாவு கலக்க

Steps:

  1. முதலில் நன்றாக பழுத்த வாழைப்பழம் 10 பழம் எடுத்துக் கொள்ளுங்கள் வாழைப்பழம் கொல கொலவென குலைந்து இருக்கிறது என்றால் அதையும் வீணாக்காமல் தோலை உரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு அந்த வாழைப்பழங்களை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளுங்கள் பின்பு அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்துக் கொள்ளுங்கள் பின்பு வெள்ளத்தை நொறுக்கி கட்டியா இல்லாமல் மாவு போல் செய்து சேர்த்து கொள்ளுங்கள்.
  3. ஏலக்காயை தூள் செய்து சேர்த்து கொள்ளவும் அதனுடன் முந்திரி குருணை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு 1 டீஸ்பூன் உப்பு மற்றும் கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.
  4. மாவு இறுக்கமாக இல்லாமல் தளர்வாக இருப்பதற்காக பாலை கொஞ்சமாக சேர்த்து மிக்ஸ் பண்ணவும் பின் மறுபடியும் கோதுமை மாவு அரை கப் சேர்த்து மாவு பதத்திற்கு வரும் வரை நன்றாக கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. மாவு பதத்திற்கு வந்தவுடன் அந்தபாத்திரத்தை எடுத்துக்கொண்டு தோசை ஊற்றுவதற்கு தயாராகிக் கொள்ளுங்கள். தோசை கல்லை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி தோசைக்கல் சூடாகும் வரை காத்திருக்கவும்.
  6. தோசை கல் சுடேறியவுடன் வாழைப்பழம் மாவு எடுத்து உங்களுக்கு தேவையான அளவு சிறியதாகவும், பெரியதாகவும் வேண்டும் அளவில் தோசையை ஊற்றிக் கொள்ளுங்கள்.
  7. தோசையை திருப்பி போடுவதற்கு முன் அடியில் சிறிதளவு நெய்யுற்றி தோசையை திருப்பி போடவும். தோசை வெந்து விட்டதா என்பதை தெரிந்து கொள்ள தோசையின் அடிப்பாகம் கோல்டன் மற்றும் இளஞ்சிவப்பு கலராக வரும் இரண்டு பக்கமும் இதே நிறமாக வந்தவுடன்.
  8. தோசையை தட்டில் வைத்து பரிமாறிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான வாழைப்பழ தோசை இனிதே தயாராகி விட்டது.