சப்பாத்தி, தோசைக்கு சுவை மிகுந்த பட்டாணி மசாலா கறி சுலபமாக இப்படி ஒரு தரம் செஞ்சு கொடுங்க!

Summary: சப்பாத்தி,பட்டாணி மசாலா கறி என்றலே கொஞ்சம்பசிக்க ஆரம்பிக்கும். ஏனென்றால் இதன் மணம் அனைவரையும் சாப்பிட தூண்டும். குழந்தைகளுக்குசுவையான உணவு வகைகள் செய்து கொடுத்தால் அவர்களும் விருப்பமாக சாப்பிடுவார்கள். பள்ளிமுடிந்து வரும் குழந்தைகள் சுடச்சுட சாப்பிட விருப்பமான உணவைக் கொடுத்தால் தட்டாமல்சாப்பிடுவார்கள். அப்படி அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு பட்டாணி மசாலா கறி எப்படி சுவையாகசெய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • 1 கப் பச்சை பட்டாணி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 காய்ந்த மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • உப்பு
  • தேங்காய் எண்ணெய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  2. கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது. பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. உப்பு ,மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்க்கவும். பிறகு பட்டாணி சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.
  4. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.