தக்காளி தொக்கு சாதம் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பிடி சாதம் கூட மிச்சம் இருக்காது!

Summary: தக்காளி உடம்புக்கு எவ்வளவு நல்லது என்று அனைவருக்கும் தெரிந்தது தான். பல நோய்களுக்கு தக்காளி ஒரு நல்லமருந்து. ஒரு தக்காளி தொக்கு போன்ற பொருட்கள் எதையுமே சேர்க்காமல் மிக மிக எளிமையாகவீட்டில் இருக்கும் ஒன்று, சில பொருள்களை வைத்து அருமையாக செய்யக் கூடிய ஒரு ரெசிபிதான் இந்த தக்காளி தொக்கு. இந்த முறையில்  ரொம்ப எளிமையாக அருமையான சுவையில் தக்காளி தொக்குசாதம் செய்வது எப்படி? அப்படின்னு தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

Ingredients:

  • 1 கிண்ணம் வடித்த சாதம்
  • 2 பெரியவை தக்காளி
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 கீரியது பச்சை மிளகாய்
  • மஞ்சள் பொடி
  • 1/2 தே.கரண்டி கடுகு
  • உப்பு
  • 1 தே.கரண்டி உ.பருப்பு
  • 1 தே.கரண்டி க.பருப்பு
  • 1 மே.கரண்டி கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • பெருங்காய தூள்
  • 3 மே.கரண்டி எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பாத்திரத்தில் எண்ணெய் சூடாணதும் கடுகு,உ.பருப்பு, க.பருப்பு. கறிவேப்பிலை இட்டு பொரிக்கவும்.
  2. அதில் மிளகாய், வெங்காயம் இட்டு நன்றாக வதக்கவும், பின்னர் பெருங்காயம் தூள் சேர்கவும்.
  3. தக்காளி சேர்த்து, சிறிது உப்பிட்டு வதக்கவும்.
  4. தக்காளி நன்கு வதங்கி கறைந்ததும். மஞ்சள் தூள், உப்பு. சிறிது எண்ணெய் சேர்த்து இளந் தீயில் 2 நிமிடம் மூடிவைத்து, கொத்தமல்லி சேர்த்து இரக்கவும்.
  5. இதில் 1 கிண்ணம் சாதம் சேர்த்து, நன்றாக கிளறி.சூடாக பறிமாறவும்.