ருசிகரமான எலுமிச்சை அவல் சாதம் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: ஆரோக்கியமும், சுவையும் அள்ளிக் கொடுக்கும்இந்த எலுமிச்சை அவல் சாதம் இப்படி செஞ்சு பாருங்க இனி அடிக்கடி இதைத்தான் செய்வீங்க!பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் இட்லி, தோசை, பின்னர் மீண்டும் மதிய உணவுக்குசாப்பாடு, குழம்பு, பிறகு அவர்கள் வீட்டிற்கு வந்ததும் இரவு உணவிற்கும் அதே இட்லி,தோசை என அனைத்திலும் அரிசி உணவுகளை தான் கொடுக்கிறோம். இவ்வாறு மூன்று வேளையும் அரிசிஉணவுகளை உண்பதால் குழந்தைகளுக்கு தேவையற்ற கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகரித்து, சிலகுழந்தைகள் பருமனாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

Ingredients:

  • 2 கப் கெட்டி அவல்
  • 2 எலுமிச்சை பழம்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • 3 பச்சை மிளகாய்
  • 3 பெருங்காயம்
  • எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுந்து
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. அவலை சுத்தமான நீரில் அலசி எடுத்துக்கொள்ளவும்.
  2. எலுமிச்சம் பழத்தை பிழிந்து விதை இல்லாத சாற்றுடன் சிறிது நீர் விட்டு உப்பு , மஞ்சள் தூள் சேர்த்துக் கரைத்து வைக்கவும்,
  3. எலுமிச்சைசாறு கலந்த நீரை அவல் மூழ்கும் அளவுக்கு ஊற்றி, அவலை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அவல்நன்றாக நீரை இழுத்துக் கொள்ளும்,
  4. வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, இவற்றுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்புகளை தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். கடைசியாக பெருங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
  5. வதக்கிய வற்றுடன்ஊற வைத்த அவலைச் சேர்த்து லேசாகப் கிளறவும். ஊறிய பிறகு மீதம் சிறிது நீர் இருந்தாலும் பரவாயில்லை, அதையும் சேர்த்தே கிளறவும், உடையாமல் கவனமாகப் கிளறிவிட்டு 10 நிமிடங்கள் சிறு தீயில் மூடி வைத்து வேகவிட்டு இறக்கினால், சுவையான எலுமிச்சை அவல் சாதம் ரெடி