எவ்வளவு செய்தாலும் காலியாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

Summary: கண்டிப்பாக நாவை சொட்ட போட வைத்து விடும். இது இனிப்புச் சுவையை வெளிப்படுத்துவதால், இந்த கீர் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் முழு குடும்பத்திற்கும் மிகவும் பிடிக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரக் கூடியது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே இதில் தாராளமாக கீர் செய்து சுவைக்கலாம். விரத பண்டிகையின் போது உங்கள் பிஸியான நேரத்திலும் கூட இந்த ரெசிபியை எளிதாக செய்து அசத்திடலாம். இதனை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 3 சர்க்கரை வள்ளிக்கிழங்கு
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/2 கப் பால்
  • 15 பாதம்
  • 15 முந்திரி
  • 4 ஏலக்காய்
  • 2 ஸ்பூன் நெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சுத்தம் செய்து தோல் நீக்கி துருவி கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை காய்ச்சிக் கொள்ளவும். பாதாம், முந்திரி, ஏலக்காய் இடித்து நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. பின் குக்கரை அடுப்பில் வைத்து நெய் விட்டு துருவிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை வதக்கி பால் சேர்த்து 4 விசில் விட்டுக் கொள்ளவும்.
  4. கிழக்கு வெந்ததும் நன்கு மசித்து சர்க்கரை, நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, ஏலக்காய், தேவையான அளவு பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  5. அவ்வளவுதான் சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு கீர் ரெடி.