காரசாரமாக பச்சைமிளகாய் பூரி ஒரு முறை இப்படி சுலபமாக செய்து பாருங்க! ஒரு பூரி கூட மிஞ்சாது!

Summary: பூரி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குஷியாகி விடுவார்கள். இருப்பினும் அதில் சத்தானதாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக உணர்வோம். பிள்ளைகள் விதவிதமான உணவு கேட்டு அடம்பிடிப்பது வழக்கம் தான். எனவே, அவர்களுக்கு ஆரோக்கியமான பலவித ஊட்டச்சத்து நிறைந்த உணவினை நாம் தர வேண்டியது அவசியம்.எந்த மாதிரியான ஆரோக்கியமான உணவை நாம் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும்.

Ingredients:

  • 1 கப் அரிசி மாவு
  • 5 பச்சை மிளகாய்
  • 1 கப் மல்லி புதினா
  • 1/2 அளவு அரைக்கீரை
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரக தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • துளசி
  • தூதுவளை
  • 3 பூண்டு
  • 1 இஞ்சி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, மல்லி, கீரை, துளசி, தூதுவளை, மிளகு, சீரகம் எல்லாம் சேர்த்து நன்கு மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின் அரிசி மாவில்  அரைத்தவிழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து பத்து நிமிடங்கள் ஊறவிடவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரியாக தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
  4. அவ்வளவுதான் சுவையான பச்சைமிளகாய் பூரி தயார். இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாம்பார், சட்னி தொட்டு சாப்பிடலாம் மிகவும் நன்றாக இருக்கும்.
  5. இந்த பூரியை மைதா கோதுமை மாவிலும் செய்யலாம் அல்லது அரிசியை ஊறவைத்து அரைத்தும் செய்யலாம்.