இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Summary: இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். வல்லாரை கீரை சட்னி சுவையில் மட்டும் சிறந்த ஒன்றாக இல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். வல்லாரை சட்னி நம் வீட்டிலேயே குறைந்த நேரத்தில் சுலபமாகவும், ருசியாகவும் சமைக்கலாம். இந்த சட்னி தோசை, இட்லிக்கு மட்டும் இல்லாமல் உப்புமா, வடை, போன்றவற்றிற்கும் தொட்டு கொள்ள சுவையாக இருக்கும் . இங்கு வல்லாரை சட்னியை சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்யலாம் என்பதை விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் சமைத்து பாருங்கள்.

Ingredients:

  • 1 Kattu வல்லாரை கீரை
  • 1 tbsl உளுத்தம் பருப்பு
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 புளி
  • 1 tsp மிளகு
  • 1 tbsp வெல்லம்
  • 1 tsp கடுகு
  • 11 கறிவேப்பிலை
  • தேவையான அளவு தண்ணீர்
  • 3 tbsp எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • கடாய்
  • மிக்ஸி
  • கரண்டி

Steps:

  1. வல்லாரை கீரை சட்னி செய்ய முதலில் கடாயில் சுத்தம் செய்து நறுக்கிய கீரை போட்டு வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  3. ஆறியதும் இரண்டு கலவையும் சேர்த்து உப்பு, புளி சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  4. பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேபில்லை போட்டு தாளித்து அதில் சேர்த்து இறக்கவும்.
  5. சுவையான ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி தயார்.