சுவையான வாழை இலை ரவா தோசை செய்வது எப்படி ?

Summary: இன்று வாழைஇலை வாசனை உடன் ரவா தோசை செய்து பார்க்க போகிறோம் இந்த வாழைஇலை ரவா தோசையில் நாம் காய்கறிகள் சேர்த்து செய்வதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மேலும் வாழை இலையை வைத்து செய்வதால் வாழை இலையில் உள்ள சத்துக்களும் நம் உடலுக்கு கிடைக்கும். தோசைக்கல்லின் மீது வாழை இலையை வைத்து அதன் மேல் நம் தோசை மாவு ஊற்றி அதற்கு மேல் மறுபடியும் வாழை இலையை வைத்து மூடி தான் இன்று நான் தோசை சுட போகிறோம் இவ்வாறு சுடும் பொழுது தான் சுவை அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

Ingredients:

  • 1 கப் ரவா
  • 1 கப் அரிசி மாவு
  • 1 கப் தயிர்
  • ½ கப் கேரட்
  • ½ கப் பீன்ஸ்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கைப்பிடி கொத்த மல்லி
  • ½ tbsp துருவிய இஞ்சி
  • 2 tbsp நெய்
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்
  • 1 வாழை இலை

Steps:

  1. முதலில் மாவுடன் சேர்த்து கலப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு பெரிய பவுளில் ஒரு கப் அளவு ரவை மற்றும் ஒரு கப் அளவு அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. பின் இதனுடன் அரை கப் கேரட், அரை கப் பீன்ஸ், அரை டீஸ்பூன் துருவிய இஞ்சி, அரை டீஸ்பூன் சீரகம், 1/4 டீஸ்பூன் மஞ்சள், ஒரு கைப்பிடி கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
  3. அதன் பின் மாவை கலந்துவிட்டு பின் ஒரு கப் அளவிற்கு அதிகம் புளிக்காத தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு. இதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.
  4. பின்பு நாம் தயார் செய்த மாவை 10 நிமிடங்கள் நன்கு ஊற வைத்து விடுங்கள். பின்பு வாழை இலைகளை சதுரமாக வெட்டி இரண்டு இலையை எடுத்து அதன் மேல் நன்றாக நெய் தடவிக் கொள்ளுங்கள்.
  5. அதன் பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடேறியதும் ஒரு வாழை இலையை தோசை கல்லில் வைத்து அதன் மேல் மாவை ஊற்றி அதற்கு மேல் இன்னொரு இலையை வைத்து மூடி விடுங்கள்.
  6. பின்பு அடிப்பகுதியில் தோசை வெந்து வந்ததும் இலையுடன் திருப்பி விடுங்கள் அவ்வளவுதான் இரு பக்கமும் வெந்தவுடன் தோசையை எடுத்துவிட்டு. இதேபோல் மீண்டும் இலையை வைத்து தோசை சுடுங்கள் அவ்வளவுதான் சுவையான வாழை இலை ரவா தோசை இனிதே தயார்