ஆலு கோபி பட்டர் மசாலாவை இப்படி செய்து கொடுத்து பாருங்கள்! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவார்கள்!

Summary: சப்பாத்திக்கு அருமையான பக்க உணவு ஆலு கோபி பட்டர் மசாலா தான். இதை பலரும் கடையில் வாங்கி சாப்பிட்டுருசிக்கிறார்கள். ஆனால் வீட்டிலேயே ரொம்ப ரொம்ப சுலபமா நாமலே செய்திடலாம். கடையில்வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டில் சாப்பிடுவது ஆரோக்கியமான முறையில் இருக்கும். அட்டகாசமானசுவையில் ஆலு கோபி பட்டர் மசாலாவை வீட்டிலேயே எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின்மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Ingredients:

  • 1 வேகவைத்த உருளை
  • 1 கப் காலிப்ளவர்
  • 1 கப் பச்சைப்பட்டாணி
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • எண்ணெய்
  • உப்பு
  • 1 தேக்கரண்டி பட்டர் அல்லது நெய்
  • 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள்
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி சீரகத் தூள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 3 ஏலக்காய்
  • 3 கிராம்பு
  • 1சின்ன துண்டு பட்டை
  • 2 பிரிஞ்சி இலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.காலிப்ளவரை வெந்நீரில் போட்டு எடுத்து சிறிய பூக்களாக உதிர்த்து வைக்கவும்.வெங்காயம், தக்காளியை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. ப்ரைபேனில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் காளிப்ளவரை போட்டு அரை தேக்கரண்டி மிளகாய்தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.ப்ரவுன் நிறமானதும் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
  3. அதே பேனில் மீண்டும் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அரை தேக்கரண்டி மிளகாய்தூள், உப்பு போட்டு நல்ல பிரட்டி விடவும்.
  4. கிழங்கு கொஞ்சம் முறுகலானவுடன் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்,பேனில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பச்சைபட்டாணியை போட்டு 2 நிமிஷம் நன்கு பிரட்டி விடவும்
  5. விரும்பினால் அனைத்து காய்கறிகளையும் நிறைய எண்ணெய் ஊற்றி டீப் ப்ரை செய்தும் எடுத்து கொள்ளலாம். ப்ரை பேனில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சீரகம், பிரிஞ்சிஇலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்..
  6. பின்பு அதில் வெங்காயம் சேர்த்து ப்ரவுன் நிறம் வரும் வரை வதக்கவும்.பின்பு தக்காளி சேர்த்து வதக்கி விட்டு பொடிவகைகள் அனைத்தையும் போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  7. தக்காளி நன்கு வதங்கும் வரை கிளறவும் தாளித்தவை நன்கு வதங்கியதும் பொரித்து வைத்த காய்கறிகளை சேர்த்து 3 நிமிடம் நன்றாக கிளறி விடவும்
  8. காய்கறியில் மசாலா சேர்ந்தவுடன் மல்லி இலையை தூவி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி முடிபோட்டு 5 நிமிடம் தீயை குறைத்து வைக்கவும்.
  9. தண்ணீர் வற்றி கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.மேலே பட்டர் போட்டு பரிமாறலாம். சுவையானஆலு கோபி மட்டர் மசாலா தயார்.இதை சப்பாத்தி, நாண், ப்ரைடு ரைஸ், வெஜ் பிரியாணிவுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.