கேரட் மற்றும் சௌசௌ சேர்த்து கல்யாண வீட்டு கூட்டு இப்படி சுலபமாக செஞ்சி பாருங்க!

Summary: உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேரட் மற்றும் சௌசௌ வைத்து நிறைய விதமான பதார்த்தங்களை சமைத்திருப்போம்.இதுவரை கேரட்டை தனியாகவும், சௌசௌ தனியாகவும் வைத்து பொரியல் செய்து கொடுத்திருக்கிறோம்.ஆனால் இந்த கேரட் மற்றும் சௌசௌ இவை இரண்டுடன் பருப்பு சேர்த்து செய்யும் இந்த கூட்டைஒருமுறை செய்து கொடுத்துப் பாருங்கள். .இதை பூரி, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்துசாப்பிடலாம்.அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 சௌசௌ
  • 1 கப் துவரம் பருப்பு
  • 2 கேரட்
  • 4 பச்சை மிளகாய்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 துண்டு தேங்காய்
  • 1 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். சௌசௌ,கேரட் இரண்டையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  2. துவரம் பருப்பை வேக வைத்து தயாராக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கின சௌசௌ, கேரட், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  3. மிக்ஸியில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். காய்கள் நன்கு வெந்ததும் அரைத்த விழுதை போட்டு கிளறி விடவும்.
  4. 5 நிமிடங்கள் கழித்து வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை ஊற்றி கிளறவும். இந்த கலவை நன்கு 10 நிமிடம் வரை கொதித்ததும் இறக்கி வைத்து விடவும்.
  5. வாணலியில்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து இறக்கி வைத்திருக்கும் கூட்டில் கொட்டவும்
  6. சுவையான சௌசௌ கேரட் கூட்டு தயார்.