காரசாரமான ருசியில் பீர்க்கங்காய் வேர்க்கடலை கறி ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: பெரும்பாலும் நிறைய பேருக்கு பீர்க்கங்காயை எப்படி சமைப்பது என்றே தெரியாது. பீர்க்கங்காய் …உடல்எடை இழப்பை ஊக்குவிக்கிறது . நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலுக்கு குளிர்ச்சிதரக்கூடிய இந்த பீர்க்கங்காயை வாரம் ஒரு முறையாவது நம்முடைய உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அருமையான சுலபமான பீர்க்கங்காய் வேர்க்கடலை கறி எப்படிசெய்வது, தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.

Ingredients:

  • 1 பெரியது பீர்க்கங்காய்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 கப் வேர்க்கடலை
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1/2 தேக்கரண்டி கசகசா
  • 1 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பீர்க்கங்காயைத் தோல் நீக்கி மெல்லிய வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியைச் சிறு துண்டுகளாகவும் நறுக்கி வைக்கவும்.
  2. பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும் வெறும் வாணலியைச் சூடாக்கி, அதில் தோல் நீக்கிய வேர்க்கடலையைப் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்
  3. வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கசகசா சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
  4. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு. சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும், அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி வதங்கியதும் பீர்க்கங்காயைச் சேர்த்து வதக்கவும் பிறகு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் வைத்து வேகவிடவும்
  6. பீர்க்கங்காய் வெந்ததும் அரைத்த கலவையைச் சேர்த்து, அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்றாகக் கிளறிவிட்டு இறக்கவும். சுவையான பீர்க்கங்காய் வேர்க்கடலை கறி தயார்