தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

Summary: பொதுவாக குழந்தைகளை பற்றி நாம் சொல்ல வேண்டுமெனில், அவர்களுக்கு பால் சாப்பிட பிடிக்காது. ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடவும் பிடிப்பதில்லை. இது போன்ற சூழலில், நாம் பாலையும், பழங்களையும் வேறு சில சுவாரஸ்யமான வழிகளில் கொடுக்க முயல்வது சிறந்தது. ஆப்பிள்களில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது நம்முடைய குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், இதனில் வைட்டமின் C மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. அதற்கு தான் இந்த இனிப்பான, ஆரோக்கியமான ஆப்பிள் கீர். இதனை எப்படி செய்வது என்பதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Ingredients:

  • 1 பெரிய ஆப்பிள்
  • 1/2 லிட்டர் பால்
  • 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 10 முந்திரி
  • 3 ஏலக்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி தண்ணீர் விடாமல் காய்ச்சி கொள்ளவும்.
  2. பால் அடர்த்தியாக மிதமான மஞ்சள் வண்ணம் வரும் வரை காய்ச்சவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கி, அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
  3. பின்னர் ஆப்பிளை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.  ஒருவாணலியில் நெய் விட்டு முந்திரி, ஏலக்காயை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. பின்னர் அதே வாணலியில் சிறிதளவு நெய் விட்டு துருவிய ஆப்பிள் சேர்த்து நன்கு வதக்கவும். நீர் வற்றி ஒட்டாமல் சுருண்டு வரும் வரை நன்கு வதக்கி ஆறவிடவும்.
  5. ஆப்பிள் மற்றும் பால் ஆறியவுடன் ஆப்பிளை பாலில் கலந்து, நெய்யில் வறுத்த முந்திரியை மேலே தூவி, குளிர்சாதன பெட்டியில் அரைமணி நேரம் குளிர வைத்து எடுத்து பரிமாறவும்.
  6. அவ்வளவுதான் மிகவும் சுவையான ஆப்பிள் கீர் ரெடி.