இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

Summary: துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியானஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒருஸ்பூன் துவரம் பருப்பை சேர்த்துக் கொள்கிறோம். அவ்வாறு துவரம் வைத்து சமைக்கும் எந்தஉணவும் உடம்பிற்கு நல்ல ஆரோக்கியம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. துவரம் பருப்புஉடம்பினை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளாகும். அவ்வாறு துவரம்பருப்பில் செய்யக்கூடிய இந்த அடை ரெசிப்பியும் மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.ஆகவே இதனை எளிமையாக செய்து விட முடியும். எப்பொழுதும் துவையல், பருப்பு பொடி போன்றவற்றைசெய்யும்பொழுது இந்த துவரம் பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். வாருங்கள் இப்போது துவரம்பருப்பு அடையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 150 கிராம் பச்சரிசி
  • 150 கிராம் துவரம் பருப்பு
  • 200 gram வெல்லம்
  • எண்ணெய்
  • 1 சிட்டிகை உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. அரிசியையும்,துவரம் பருப்பையும் சம அளவில் எடுத்துகழுவி வைக்கவும். முதலில் கழுவி வைத்த அரிசியையும் பருப்பையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் போட்டு இட்லி மாவு பதத்தில் கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மையாக அரைக்க வேண்டாம்.
  2. இதனுடன் தேவையான அளவு இடித்த வெல்லத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. தோசைக் கல்லை காய வைத்து இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு மாவை சிறிது மொத்தமாக அடை போல் ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு சிறு தீயில் வேக விடவும். பின் திருப்பி போட்டு வேக விடவும்.
  4. இதோ ஹெல்தியான துவரம் பருப்பு வெல்ல அடை தயார். மாலை நேரத்திற்கு ஏற்ற இனிப்பு வகை இது.
  5. இந்த துவரம் பருப்பு வெல்ல அடை குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். உப்பு சிறிது சேர்ப்பது இனிப்பின் சுவையை கூட்டுவதற்காக மற்றும் இனிப்பு போதவில்லையெனில் சர்க்கரை கூட சிறிது சேர்த்து கொள்ளலாம். முக்கியமாக இனிப்பு சேர்ப்பதால் அடிப்பிடிக்கும், லாவகமாக எடுத்து திருப்பி போடவும்.