அடுத்தமுறை புடலங்காய் வாங்கினால் இப்படி ரோஸ்ட் செய்து பாருங்க! 10 நிமிஷத்துல ஸ்நாக்ஸ் ரெடி!

Summary: புடலங்காய் வைத்து  கூட்டு, பஜ்ஜி போன்ற பல வகை உணவுகளை சமைக்கலாம்.  புடலங்காய் வைத்து ரோஸ்ட் செய்து கொடுத்தால் அப்படியேஅசைவ சுவையிலே இருக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சுவையான புடலங்காய் ரோஸ்ட் எப்படிசெய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

Ingredients:

  • 1/2 கிலோ புடலங்காய்
  • 1 கப் கடலைமாவு
  • 1/2 கப் பச்சரிசி மாவு
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. புடலங்காயை மெல்லியதாக நறுக்கவும். அதில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு, உப்பு சேர்க்கவும்.
  2. சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து ஒன்றாக பிசையவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்ததை போட்டு சிவக்க விட்டு எடுக்கவும்.
  4. சுவையான புடலங்காய் ரோஸ்ட் தயார். இந்த ரோஸ்ட் சாம்பார் சாதம், ரசத்துக்கு மிக பொருத்தமாக இருக்கும். இரண்டு நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாம்.