எப்பொழுதும் ஒரே ரசமா ? இப்படி கமகமனு அண்ணாச்சி பழ ரசம் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

Summary: நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி,மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அன்னாசிப் பழத்தை சாப்பிட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இவ்வாறு பல்வேறு நன்மைகளை அள்ளித் தரும் அன்னாசிப் பழத்தைக் கொண்டு, சுவை மிகுந்த மற்றும் ஆரோக்கியமான ரசத்தை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

Ingredients:

  • 1 கப் நறுக்கிய அன்னாசி பழம்
  • 2 கப் தண்ணீர்
  • 2 டேபிள் ஸ்பூன் புளி கரைசல்
  • 1/4 ஸ்பூன் பெருங்காயம்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 7 பல் பூண்டு
  • 4 காய்ந்த மிளகாய்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு நறுக்கி வைத்த அன்னாசி பழம் சேர்த்து குறைந்தது 5 நிமிடம் கொதிக்க விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. பின் மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்
  3. பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, அன்னாசிப்பழ சாறு சேர்த்து அதனுடன் புளிக் கரைசலை சேர்த்து, பின்னர் அதில் அரைத்த இஞ்சி பூண்டு சீரகம் விழுதை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. அதனுடன் சிறிது கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  5. அதில் நாம் கரைத்து வைத்த கலவையை ஊற்றி கொதி வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
  6. அவ்வளவுதான் சுவையான அன்னாசி பழ ரசம் தயார்.