சோயா சங்ஸ் வெஜ் பிரியாணியை உதிரி உதிரியாக அருமையான சுவையில் இப்படி ஒருமுறை செய்து பாருங்களேன்!!

Summary: பிரியாணியில் பலவகை உண்டு. அதில் இன்று நாம் காண இருப்பது சோயா சங்க் பிரியாணி. இவை ஒரு கலக்கலான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. அது மட்டுமின்றி சோயா சங்குகளில் உடம்புக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து அதித அளவு இருப்பதினால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது. இவை செய்வதற்கு சிறிது நேரம் பிடித்தாலும் இதனின் செய்முறை மிகவும் சுலபமானது தான். விசேஷ நாட்கள், பிறந்த நாட்கள், அல்லது விருந்துக்கு உறவினர்கள் வீட்டுக்கு வரும் பட்சத்தில் வழக்கமாக செய்து பரிமாறப்படும் பிரியாணி மற்றும் ஃப்ரைட் ரைஸ்களுக்கு பதிலாக இந்த சோயா சங்க் பிரியாணியை பரிமாறி அசத்தலாம்.

Ingredients:

  • அரிசி
  • சோயா சங்க்ஸ்
  • 1 கப் நறுக்கிய கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு
  • கொத்தமல்லி
  • புதினா
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • பெரிய தக்காளி
  • கெட்டி தயிர்
  • எண்ணெய்
  • நெய்
  • சோம்பு
  • சீரகம்
  • கிராம்பு
  • பட்டை
  • ஏலக்காய்
  • முந்திரி பருப்பு
  • பிரியாணி இலை
  • 1 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அரிசியை கழுவி ஊற வைத்து கொள்ளவும்.சோயா சங்கை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர்பிழிந்து எடுத்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சோயா சங்க்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்த்து இதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
  3. அடுப்பை கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. பின் தக்காளி, சிறிதளவு கொத்தமல்லி புதினா இலை சேர்த்து வதக்கவும். இவை நன்கு வதங்கியதும் ஊற வைத்த சோயாமற்றும் காய்கறிகள் கலவையை சேர்த்து வதக்கவும்.
  5. காய்கறிகள் சிறிது வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்ததும் அரிசி சேர்த்து கிளறி விடவும்.
  6. தண்ணீர் வற்றி வரும் போது நெய் மற்றும் கொத்தமல்லி புதினா இலைகளை தூவி 10- 15 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
  7. 15 நிமிடங்கள் கழித்து திறந்து பிரியாணியை நன்கு கிளறி விடவும். இப்போது சுவையான சோயா சங்ஸ் வெஜ் பிரியாணி தயார். தயிர் வெங்காயம் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்