அடுத்தமுறை சோயா பீன்ஸ் வாங்கினால் இப்படி கூட்டு செய்து பாருங்க! சுடு சாதத்துடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!

Summary: சோயாவை வைத்து சுண்டல், கிரேவி, சப்ஜி என்று பல விதங்களில் சமைக்கலாம்.அந்த வகையில் இன்று நாம் சோயா வைத்து ஸ்பைசியான சோயா கூட்டை காண உள்ளோம். இதனை பூரி, சப்பாத்தி,புல்கா,சாதம் போன்றவற்றிற்கு வைத்து சாப்பிட அருமையாக இருக்கும். இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு, நாவிற்கு சுவையையும் தரக்கூடிய ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப சுலபமா வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சட்டுனு இந்த ரெசிபியை செய்திடலாம். இதனை பெரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

Ingredients:

  • 150 கி சோயா பீன்ஸ்
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 50 மிலி எண்ணெய்
  • 1 ஸ்பூன் நெய்
  • 10 சின்ன வெங்காயம்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி
  • தண்ணீர்
  • 2 ஸ்பூன் சிக்கன் மசாலா
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சோயாவை உரித்து சுத்தம் செய்து வைக்கவும். பின் வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சிறிதளவு கருவேப்பிலை கொத்தை சேர்க்கவும்.
  2. பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் சுத்தம் செய்து வைத்த சோயாவைச் சேர்த்து சிவப்பு நிறம் மங்களான சிவப்பு நிறத்திற்கு மாறும் வரை வதக்கவும்.
  3. அதன் பிறகு சிக்கன் மசாலாவைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
  4. பின் குக்கரை மூடி 3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். விசில் போனதும் குக்கரை திறந்து சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
  5. அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சோயாபீன்ஸ் கூட்டு தயார்.