ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த சன்ஷைன் ஜூஸ் இப்படி எளிமையாக வீட்டிலயே செய்து பாருங்க!

Summary: சன்ஷைன் ஜூஸில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, கேன்சருக்கு எதிராக போராடுகிறது. மேலும்இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீர் செய்கிறது. இதில் இனிப்பு எதுவும்சேர்க்காமல் குடித்தால் நல்லது. மேலும் இது சரும ஆரோக்கியம், இருதய ஆரோக்கியம், லிவர்,கண்கள் போன்றவற்றையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. விட்டமின் ஏ, விட்டமின் சி,விட்டமின் ஈ மற்றும் விட்டமின் பி ஆகியவை அதிகம் நிறைந்துள்ள தக்காளி ,வெள்ளரி  கேரட்டில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், மினரல்கள் போன்றவையும்உள்ளன. வாங்க இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1/2 கிலோ கேரட்
  • 100 கிராம் வெள்ளரி
  • 100 கிராம் தக்காளி
  • 1/2 டீஸ்பூன் வெள்ளை மிளகு
  • 2 சிட்டிகை உப்பு
  • 50 கிராம் கருப்பட்டி
  • 10 துளிகள் எலுமிச்சம் பழச்சாறு

Equipemnts:

  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் கேரட்டின் தோலை கட் பண்ணாமல் சுடுதண்ணீரில் போட்டு நன்றாக வாஷ்பண்ண வேண்டும்.
  2. ஏன்தோலை கட் பண்ணக் கூடாதுன்னா தோல்லதான் விட்டமின் – "ஏ" சத்து அடங்கியிருக்கு) அடியையும் நுனியையும் கட் பண்ணினால் போதும்.
  3. வெள்ளரியை எப்பவும் போல கட் பண்ணிக்க வேண்டும் தக்காளியை மேலே ரவுண்டா கட்பண்ணி கருப்பட்டி, எலுமிச்சம் பழம், உப்பு எல்லாத்தையும் சேர்த்து அப்படியே மிக்ஸியில் ஒரு அடி அடித்தால்போதும் "திக்"கான சன்ஷைன் ஜூஸ் ரெடி.
  4. தண்ணீர் தேவையான அளவுக்கு ஊத்தினால் போதும். தோல் சருமத்துக்கு இது ரொம்ப ரொம்ப நல்ல ஜூஸ்.