இரவு உணவுக்கு வெஜிடபுள் சப்பாத்தி ஒருமுறை இப்படி செய்து பாருங்க! பின் அடிக்கடி உங்கள் வீட்டில் இதுதான் உணவு!

Summary: சப்பாத்தி பூரி என்பது பலரது வீட்டில் அடிக்கடிசெய்யும் ஒரு உணவு வகை தான். என்றாலும் சப்பாத்தி செய்து அதனுடன் தொட்டுக்கொள்ள சென்னாமசாலா, உருளைக்கிழங்கு மசாலா மற்றும் தக்காளி தொக்கு இதுபோன்ற சைடிஷ் தான் அடிக்கடிசெய்வதுண்டு. ஆனால் பெரிய அளவில் சைடிஷ் எதுவும் செய்யாமல் இந்த வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தியை செய்து கொடுத்தால் போதும். குழந்தைகள் அழகாக சாப்பிட்டு முடிப்பார்கள். ஒரு முறை இதனை செய்து கொடுத்துபாருங்கள். மீண்டும் அடிக்கடி செய்து கொண்டே இருப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் பள்ளி செல்லும் போது காலையில் இதனை சட்டென செய்து அவர்களின் லஞ்ச் பாக்சில் வைக்க முடியும்.

Ingredients:

  • 2 கப் கோதுமை மாவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 முள்ளங்கி
  • 1 காரட்
  • 1/2 குடைமிளகாய்
  • 2 உருளைக்கிழங்கு
  • 1/2 தேக்கரண்டி உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. முள்ளங்கி,காரட் இரண்டையும் துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், குடை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்குடன் வெங்காயம், முள்ளங்கி, காரட், குடைமிளகாய், உப்பு சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும்.
  3. கோதுமை மாவுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து ஒரு உருண்டை மாவை எடுத்து கட்டையில் வைத்து சப்பாத்தியாக இடவும்.
  4. அதில் செய்து வைத்திருக்கும் மசாலாவை வைத்து நான்கு புறமும் மூடி மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியை போட்டு மேலே எண்ணெய் தடவி வெந்ததும் எடுக்கவும்.
  5. சுவையான வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி.