காரசாரமான கன்னியாகுமரி நண்டு மசாலா குழம்பு செய்வது எப்படி ?

Summary: அசைவத்தில் பலவித டிஷ்கள் உள்ளது, கோழி, மீன், இறால், நண்டு, என்று அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் அசைவ உணவுகள் சாப்பிடுவதில் பெரும்பாலும் கடல் உணவு பிரியர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். இருந்தாலும் கடல் உணவுகளை சமைப்பதில் வேலைபாடுகள் அதிகம் இருப்பதால் யாரும் வீடுகளில் அதிகமாக சமைப்பது கிடையாது. அதையும் தாண்டி கடல் உணவுகள் சாப்பிட நினைப்பவர்கள் ஹோட்டல் சென்றால் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொள்வார்கள். ஆனால் இனி இதை செய்யாதீர்கள் கடல் உணவுகளில் சுவையான உணவு என்று எடுத்துக் கொண்டால் அதில் நண்டுவும் ஒன்று தான். அதனால் இன்று நண்டு குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதிலும் கன்னியாகுமரி நண்டு மசாலா குழம்பு மிகவும் பிரபலமானது.

Ingredients:

  • ½ கிலோ நண்டு
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • கறிவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு போஸ்ட்
  • 1 பிரியாணி இலை
  • 1 பட்டை
  • 4 ஏலக்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  • ¼ டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • கருவேப்பிலை
  • 4 பச்சை மிளகாய்

Steps:

  1. முதலில் நாம் வாங்கி வைத்திருக்கும் நண்டை நன்கு சுத்தம் செய்து தண்ணீரல் இரண்டு முறை நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் கடையிலே சுத்தம் செய்தே வாங்கி தண்ணீரில் அலசி மட்டும் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், சோம்பு, சேர்த்து தாளித்து கருவேப்பிலை சேர்த்து கிளறிய பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  3. பின்பு அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
  4. பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகுதூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறிய பின் மூடி வைத்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கி விட வேண்டும்.
  5. அடுத்து அதில் நண்டு சேர்த்து நன்கு மசாலா நண்டில் சேரும் வரை பிரட்டிவிடவேண்டும். பின் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து நண்டை வேக வைக்க வேண்டும்.
  6. அதற்குள் மிக்சியில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
  7. நண்டின் நிறம் ஆரஞ்சு நிறத்தில் மாற ஆரமித்தால், நண்டு வெந்து விட்டது என்று அர்த்தம். பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து பச்சைவாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கன்னியாகுமரி நண்டு மசாலா ரெடி.