புராட்டாசி மாத ஸ்பெஷல் மீன் வறுலை மிச்சும் கருனை கிழங்கு வறுவல் ஆனால் அதை மீன் சுவை இருக்கும்!

Summary: சேனைக்கிழங்கு,கருணைக்கிழங்கு என்றெல்லாம் கூறப்படும் இந்த கிழங்கு வகை ஒரு விதமான நாக்கு அரிப்புதன்மையை ஏற்படுத்தும் என்பதால் யாரும் இதனை நெருங்குவது இல்லை ஆனால் இதன் சுவையை மிஞ்சியஒரு கிழங்கு இருக்கவே முடியாது. கருணைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க அரிக்கவும்செய்யாது, சுவையும் அட்டகாசமாக இருக்கும். கருணைக்கிழங்கு வறுவல் செய்து கொடுத்தால்இன்னும் கொஞ்சம் சாப்பாடு போடுங்க என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்குருசியாக இருக்கப் போகிறது. இந்த கருணைக்கிழங்கு வறுவல் சுலபமாக எப்படி செய்யலாம்? என்பதைஇனி தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Ingredients:

  • 1/4 கிலோ காராகருணை
  • 1/4 கப் அரிசி மாவு
  • 2 மேசைக்கரண்டி தனி மிளகாய் தூள்
  • 1/4 மேசைக்கரண்டி சோம்பு தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 தேக்கரண்டி கல் உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. காராகருணையை ஒரு இஞ்சு ஸ்லைஸாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காராகருணையுடன் கல் உப்பு போட்டு குழுக்கி 10 நிமிடம் வைக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி கழுவிக் கொள்ளவும்.
  2. அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் காராகருணையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைக்கவும்.ஒரு தட்டில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரிசி மாவு, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
  3. பிறகு 3 மேசைக்கரண்டி அல்லது 4 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக பிசைந்துக் கொள்ளவும். அதில் வேக வைத்த காராகருணையை போட்டு எல்லாவற்றிலும் படும்படி பிரட்டி விடவும்.
  4. தோசைக்கல்லில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி மசாலா தடவி வைத்திருக்கும் காயை போட்டு வறுக்கவும்.
  5. ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு மற்றொரு புறமும் வெந்ததும் 2 நிமிடம் கழித்து எடுக்கவும்.
  6. மொறுமொறு காராகருணை எண்ணெய் பத்தே ரெடி