புராட்டாசி மாத ஸ்பெஷல் டோபு வாங்கி இப்படி ஒரு தரம் பாலக் டோபு செய்து பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!

Summary: பாலக் கீரையைவைத்து சுவையாக பாலக் டோபு சுலபமானது. வடமாநிலத்தில் உள்ளவர்கள் இந்தக் கீரையை அதிகம்பயன்படுத்துவார்கள். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கீரையை குழந்தைகளுக்கு டோபுவுடன் சேர்த்துசமைத்துக் கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். டோஃபு, சோயாபீன்ஸ்  பாலில் இருந்து எடுக்கப்படுவது இது ஒரு கிரீம்,அதிக புரதம், குறைந்த கொழுப்பு சோயா தயாரிப்பு ஆகும். டோஃபுவில் கால்சியம் மற்றும்இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது.

Ingredients:

  • 1 கட்டு பாலக் கீரை
  • 6 அவுன்ஸ் டோபு
  • 2 தக்காளி
  • 2 மேசைக்கரண்டி நறுக்கின வெங்காயம்
  • 1 அங்குல துண்டு இஞ்சி
  • 6 பற்கள் பூண்டு
  • 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி கறித்தூள்
  • 1 தேக்கரண்டி சீரகதூள்
  • 2 மேசைக்கரண்டி கிரீம்
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. டோபுவை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் அல்லது பேனில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும்.கீரையை சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு எடுக்கவும்
  2. பின்னர் அதனை வடித்து புட் புரோஸஸரில் போட்டு தண்ணீர் விடாது அரைத்து எடுக்கவும் (கரையும்படி அரைக்க கூடாது)ஒரு பாத்திரத்தில் மீதி எண்ணெயை ஊற்றி வெங்காயம், பெருஞ்சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  3. தக்காளி, உள்ளி, இஞ்சியை பிளன்டரில் போட்டு அரைத்து எடுக்கவும். வதக்கியவற்றுடன் அரைத்த தக்காளி கலவையை ஊற்றி மஞ்சள் தூள், கறித்தூள், சீரகத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. கலவை நன்கு கொதித்ததும் அதனுள் உப்பு மற்றும் அரைத்த கீரையை சேர்த்து கொதிக்க விடவும்.கீரை நன்கு சேர்ந்ததும் அதனுள் டோபுவை சேர்த்து கிளறி விடவும்,அதன் பின்னர் கறிவேப்பிலை, விப்பிங் கிரீமை சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்,
  5. சுவையானபாலக் டோபு தயார். இதனை நாணுடன் சேர்த்து பரிமாறவும். சப்பாத்தி மற்றும் சாதத்துடனும் இது நன்றாக இருக்கும்.