கோவைக்காய் வைச்சி இப்படி கூட சாதம் செய்யலாமா ? அடுத்தமுறை கோவைக்காய் வாங்கினால் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: கோவைக்காய் சாதம் தென்னிந்தியாவில் ஒரு மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவு. மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவுகளில் கோவைக்காய் சாதம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. நாம் இன்று இங்கு காண இருப்பது கோவைக்காய் சாதம். கோவைக்காயில் பல விதமான சத்துக்கள்இருப்பதால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது.

Ingredients:

  • 3 கப் உதிராக வடித்த சாதம்
  • 200 கிராம் கோவைக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • சிறிய லெமன் அளவு புளி
  • சிறிது கறிவேப்பிலை
  • சிறிது கொத்தமல்லி தழை
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 ஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 1/2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/8 ஸ்பூன் பெருங்காயத் தூள்
  • 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்
  • 1/2 கப் எண்ணெய்
  • 3 ஸ்பூன் நெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 கைப்பிடி வேர்க்கடலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கோவைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு அதனுடன் சிறிது நெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும். பின் வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.
  3. பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் அதில் நறுக்கிய கோவைக்காய் சேர்த்து 5 நிமிடங்கள் வரை மூடி வைத்து வேக விடவும்.
  4. பின் திறந்து காய் சற்று நிறம் மாறியதும் உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதன்பின் மீண்டும் 10 நிமிடங்கள் வரை மூடி வைத்து வேக விடவும்.
  5. கோவைக்காய் சற்று வதங்கியதும் தக்காளி மற்றும் மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் எல்லாம் சேர்த்து வதக்கவும்.
  6. பின்னர் புளிக்கரைசலை ஊற்றி நன்கு கிளறவும். பின் எல்லாம் கொதித்து தொக்கு மாதிரி வரும் அப்பொழுது உதிராக வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறவும்.
  7. பின் மீதமுள்ள நெய்யை ஊற்றி கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறவும்.அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான கோவைக்காய் சாதம் தயார்.