கல்யாண வீட்டு அவியல் கூட்டு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அதன் ரகசியமே இது தான்!

Summary: காய்கறிகளில் உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்அதிகம் நிறைந்திருக்கிறது. எனவே காய்கறிகளை எப்படியாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. எனவே இந்த காய்கறிகளையும்வீட்டில் உள்ளவர்கள் தட்டாமல் சாப்பிட அவற்றை இப்படி வித்தியாசமான சுவையில் அவியல்செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் அப்படி வித்தியாசமான இந்தஅவியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 முருங்கைக்காய்
  • 1/4 துண்டு சேனை
  • 1 வாழைக்காய்
  • 1/4 துண்டு வெள்ளரிக்காய்
  • 1/4 துண்டு பூசணிக்காய்
  • 1 கேரட்
  • 8 பீன்ஸ்
  • 8 கொத்தவரங்காய்
  • 1/4 கப் தயிர்
  • உப்பு
  • 1/4 கப் தேங்காய்
  • 3 பச்சை மிளகாய்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. கேரட்,பீன்ஸ், உருளை, வாழை, பூசணி, சேனை, முருங்கை ஆகியவற்றை விரல் நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. முதலில் நறுக்கின காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும் பின்னர் மற்ற காய்களையும் சேர்த்து உப்பு போட்டு வேக வைக்கவும்.
  3. அரைக்க கொடுத்துள்ள பொருட்களோடு தயிர் சேர்த்து அரைத்து எடுத்து வேக வைத்த காய்கறிகளுடன் சேர்க்கவும்.
  4. தயிர் கலவையுடன் சேர்ந்து காய்கள் நன்கு வெந்து கெட்டியானவுடன் மேலே கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
  5. சுவையான அவியல் ரெடி. தேங்காய் எண்ணெய் பிடிக்காதவர்கள் ஊற்றாமலும் செய்யலாம். உருளைக்கிழங்கிற்கு பதில் சேப்பங்கிழங்கு சேர்க்கலாம். விரும்பினால் பட்டாணி சேர்த்தும் செய்யலாம். சாதத் ஏற்ற சைட் டிஷ்.