சுவையான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி ? தீபாவளி ஸ்பெஷல்!

Summary: பண்டிகை நாட்களில் வீட்டில் குடும்பத்துடன் சில இனிப்பு பலகாரங்கள், காரசாரமான ஸ்நாக்ஸ் பொருட்களை தயார் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு அந்த பண்டிகை நாளை கொண்டாடி வருவோம். ஆனால் வரும் காலங்களில் இது போன்று நாம் செய்வது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது ஏனென்றால் பலருக்கும் பலகாரங்கள் செய்வது எப்படி என்று நாம் சொல்லிக் கொடுக்க மறந்து வருகிறோம். அதனால் இந்த தீபாவளியை உங்கள் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ வழக்கம் போல் முறுக்கு, சீடை, அதிரசம் என செய்யாமல். இந்த முறை இந்த ரிப்பன் பக்கோடா செய்து உங்கள் குடும்பத்துடன் சாப்பிட்டு இந்த தீபாவளியை கொண்டாடுங்கள்.

Ingredients:

  • 2 கப் அரிசி மாவு
  • ½ கப் பொட்டு கடலை மாவு
  • ½ கப் கடலை மாவு
  • 1 tbsp எள்ளு
  • 1 tbsp மிளகாய் தூள்
  • ¼ tbsp பெருங்காய தூள்
  • உப்பு
  • 3 tbsp சூடான எண்ணெய்
  • தண்ணீர்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 முறுக்கு பிழியும் இயந்திரம்

Steps:

  1. முதலில் ஒரு இரண்டு கப் அரிசி மாவு எடுத்து நன்றாக சலித்துக் கொண்டு ஒரு பெரிய பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் பொட்டு கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து அதில் இருந்து ஒரு அரை கப் பொட்டுக்கடலை மாவு எடுத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் 1/2 கப் கடலை மாவை சலித்து இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
  2. பின் நம் கலந்து வைத்திருக்கும் மாவுடன் ஒரு டீஸ்பூன் அளவு எள்ளு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் ஒரு மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெயை சூடேற்றி அதை மாவுடன் இருக்கும் பவுளில் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.
  3. அதன் பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை தண்ணீராக இல்லாமலும் கட்டியாகவும் இல்லாமல் மென்மையான பதத்திற்கு நன்றாக பிசைந்து எடுத்து கொள்ளுங்கள். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதோடு பக்கோடா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தீயை மிதமான அளவில் ஏரிய விடுங்கள்.
  4. பின்பு முறுக்கு பிழியும் இயந்திரத்தை எடுத்து அதன் உள் பகுதியில் நன்றாக எண்ணெய் தடவி விட்டு உள்ளே மாவை வைத்து சீவல் பொரிப்பதற்கு போடும் நீளமான சில்லை போட்டு நேரடியாக எண்ணெய் சூடு ஏறியதும் அதன் மேல் பிழிந்து விட்டுக் கொள்ளுங்கள்.
  5. பின்பு பக்கோடா நன்றாக எண்ணெயில் பொரிந்து நுறை குறைந்ததும் பக்கோடவை வெளியே எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு இரண்டு கொத்து கருவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்து பக்கோடாவுடன் கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான ரிப்பன் பக்கோடா இனிதே தயாராகிவிட்டது.