தித்திக்கும் சுவையில் பன்னீர் பால் கொழுக்கட்டை இப்படி வீட்டிலயே செய்து பாருங்கள்! அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!

Summary: செட்டிநாடு மரபுப்படி திருமணம் முடிந்து உறவினர்கள் திருமண வீட்டில் ஒன்றாக கூடியிருக்கும் போது உறவினர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலகார வகைகள் செய்து தருவது வழக்கம். அந்த வகையில் செய்து தரப்படும் பலகார வகைகளில் பால் பணியாரம் மற்றும் பால் கொழுக்கட்டை கட்டாயம் இடம் பிடித்திருக்கும். கொழுக்கட்டைஎன்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், இந்த சுவையுள்ள பன்னீர் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1/2 கப் பன்னீர்
  • 1/4 கப் அரிசி மாவு
  • 1/2 லிட்டர் பால்
  • 5 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  • 4 குங்குமப்பூ
  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய்தூள்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பவுலில் அரிசி மாவு மற்றும் பன்னீரை துருவி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்திற்க்கு நன்கு பிசைந்து, எல்லாவற்றையும் சிறு கொழுக்கட்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் அடிக்கனமான பாத்திரம் வைத்து பால் விட்டு நன்கு கொதிக்க விடவும், நன்கு கொதிக்கும் பாலில் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டைகளை சேர்த்து மிதமான சூட்டில் வேக விடவும்.
  3. அத்துடன் குங்குமபூ சேர்த்து வேக விடவும். நன்கு வெந்ததும் கொழுக்கட்டைகள் மேல் எழும்பி வந்துடும்.
  4. அப்பொழுது சக்கரை சேர்த்து நன்கு கொதித்து பால் சுண்டி கெட்டியானதும் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவு தான்அருமையான நிறத்துடன் குங்குமப்பூ வாசத்துடன், சுவையான பன்னீர் பால் கொழுக்கட்டை தயார்.
  5. வேறொரு பாத்திரத்திற்க்கு மாற்றி குங்குமப்பூ மேல் தூவி அலங்கரித்து பரிமாறவும். தேவையெனில் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போட்டும் சாப்பிடலாம்.