முளைக் கீரை வாங்கி ஒரு முறை பொரியல் நப்படி செய்து இப்படி கொடுத்தால் ஒரு சட்டி சோறும் காலியாகும்!

Summary: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஒரு கீரையை சாப்பிட வேண்டும் என்பது தான் மருத்துவர்களின் ஆலோசனை. கீரையை ஒரே மாதிரி சுவையில் சமைத்துக் கொடுத்தால், குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். கொஞ்சம் வித்தியாசமாகஇந்த முறையில் முளைக் கீரை பொரியல் செய்து பாருங்கள். சுவை சும்மா அட்டகாசமா இருக்கும்.ரசம் சாதம் சாம்பார் சாதம் எதற்கு வேண்டுமென்றாலும் இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம்.இதேபோல முளைக் கீரையை வைத்து பொரியல் செய்முறையை இந்த குறிப்பில் நாம் தெரிந்து கொள்ளப்போகின்றோம். வாங்க புதுமையான இந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 கட்டு முளைக்கீரை
  • 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/4 டீஸ்பூன் சர்க்கரை
  • 2 வரமிளகாய்
  • 6 சின்ன வெங்காயம்
  • உப்பு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • கறிவேப்பிலை
  • 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கிக் கழுவி வைத்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வரமிளகாய் கிள்ளிப்போட்டு, கறிவேப்பிலை சேர்க்கவும்.
  2. சின்ன வெங்காயத்தைப்பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். திட்டமாகத் தண்ணீர் விட்டு, அதுகொதித்ததும் கொஞ்சமாகச் சுண்ணாம்பு போட்டு அது கரைந்ததும் கீரையைப் போடவும்.
  3. கீரை வெந்ததும் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
  4. அரைக்கீரை,பொன்னாங்கண்ணிக் கீரையிலும் இதே போல பொரியல் செய்யலாம். சர்க்கரை சேர்ப்பதால்கீரை நிறம் மாறாமல் பச்சையாகவே இருக்கும்.