ஒரு தட்டு சாதமும் காலியாகும் ருசியான வரகு சாம்பார் சாதம் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

Summary: சுலபமாகசாம்பார் சாதம் யாராலும் செய்யவே முடியாது. வெறும் 15 நிமிடத்தில் அருமையான வரகு சாம்பார் சாதம் ஆரோக்கியமாக செய்து விடலாம். நிறைய பேர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபி என்றால் அந்த வரிசையில் இந்த சாம்பார் சாதத்திற்கு முதலிடம் உண்டு. சாம்பார் இல்லாத பந்தியே இல்லை என்று சொல்லலாம். சைவ விருந்தில் முதல், முக்கிய பங்கு வகிக்க கூடிய இந்த சாம்பார் சாதத்தை மிக மிக சுலபமாக வரகு அரிசி வைத்து எப்படி செய்வது என்பதைப் பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • 1 கப் வரகு அரிசி
  • 30 கிராம் துவரம் பருப்பு
  • 3 கப் தண்ணீர்
  • 100 கிராம் சிறிய வெங்காயம்
  • 1 தேக்கரண்டி நல்லெண்ணை
  • 5 ஏதாவது காய்கறிகள்
  • 3 தக்காளி
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 1 ஈர்க்கு கறிவேப்பிலை
  • 1 பச்சை மிளகாய்
  • 2 சிட்டிகை பெருங்காயம்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 தேக்கரண்டி கடலை பருப்பு
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1 துண்டு பட்டை
  • 3 கிராம்பு
  • தேக்கரண்டி உளுந்து
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை
  • 2 தேக்கரண்டி துருவிய தேங்காய்
  • கொத்தமல்லி தழை

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் வாணலியில் சாம்பார் சாதம் மசாலா பொடி தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்துக் கொள்ளவும், ஆறிய பிறகு அவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைது, அந்தப் பொடியை தனியே வைக்கவும்.
  2. வரகரிசியையும்,துவரம் பருப்பையும் தனித்தனியே 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.கொத்தமல்லி தழை. காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் சிறிய (சாம்பார்) வெங்காயம், முழு பச்சை மிளகாய், கறிவேப்பிலை வதக்கவும். போட்டு அடுத்து தக்காளியுடன், மஞ்சள் பொடி, பெருங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  4. இப்போது அனைத்து காய்கறிகள், வரகரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து நீரை ஊற்றி வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் காத்திருந்து பின் அடுப்பை அணைக்கவும்.
  5. குக்கர் ஆவி போன பிறகு, மூடியைத் திறந்து சாம்பார் சாத மசாலா பொடியை சேர்த்துக் கலக்கவும்.
  6. குக்கரைமீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் வேக விடவும். பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான வரகு சாம்பார் சாதம் தயார்.