புதுவிதமான இந்த காய்கறி அடை தோசை செய்வது எப்படி ?

Summary: இன்று தோசை சுடுவது போல் காய்கறி அடை செய்து பார்க்க போகிறோம். இதில் நாம் பெரும்பாலும் காய்கறிகளை அதிகமாக சேர்த்து செய்வதால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை இது அல்லிக் கொடுக்கும் மேலும் குழந்தைகளை விரும்பி உங்களிடம் கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவையும் அற்புதமாக இருக்கும். ஏன் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இது பிடித்து போகும் அந்த அளவிற்கு இதில் ஊட்டச்சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படும்.

Ingredients:

  • 1 கப் ரவா
  • 3 tbsp அரிசி மாவு
  • ¼ கப் துருவிய கேரட்
  • ¼ கப் துருவிய பீட்ரூட்
  • 2 tbsp துருவிய தேங்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 tbsp இஞ்சி பேஸ்ட்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 டம்பளர் தண்ணீர்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தீயை மிதமாக எரிய விட்டு அதில் ஒரு கப் ரவையை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் வறுத்த ரவையை ஒரு பெரிய பவுளில் தட்டி அதனுடன் அரை கப் அளவு தயிர், 3 டீஸ்பூன் அளவு அரிசி மாவு மற்றும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  2. பின்பு இவ்வாறு தயார் செய்த மாவை ஒரு பத்து நிமிடங்கள் நன்கு ஊற வைத்து. பின் இதனுடன் கால் கப் துருவிய கேரட், கால் கப் துருவிய பீட்ரூட், இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி ஒரு கைப்பிடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  3. பின்பு இதனுடன் இன்னொரு அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். மாவு தண்ணீராக இருக்கக் கூடாது கட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.
  4. பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு கரண்டியால் மாவை எடுத்து தோசை போன்று ரவுண்டாக வைத்து அமுக்கி விட்டு ஒரு மூடியை வைத்து மூடி விடுங்கள்.
  5. பின்பு காய்கறி அடை தோசை நன்றாக வெந்ததும் வெளியே எடுத்து விடுங்கள். பின் இதனுடன் சட்னி வைத்து சாப்பிட்டால் அற்புதமான சுவையில் இருக்கும் அவ்வளவுதான் சுவையான காய்கறி அடை தோசை தயார்.